ரணிலின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடல் காலத்தை வீணடிப்பதற்கானதா? -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகள் காலங்களில் சர்வதேச பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வை கடந்த காலங்களில் கையாண்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் உடன்பாடு, 1995களில் சந்திரிக்கா அரசாங்கத்தின் தீர்வு திட்ட பொதி, 2002இல் ரணில் விக்கிரமசிங்காவின் நோர்வே மத்தியஸ்த சமாதான உரையாடல், 2015 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்க நகர்வுகள் என அனைத்தினதும் பின்புலத்திலும் இலங்கையில் அன்றைய கால நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் சர்வதேச ஆதரவை திரட்டுவதற்குமான உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வு உரையாடல்கள் கையாளப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உரையாடல்களும் அதிக சந்தேகங்களையே தமிழ்த்தரப்பினரிடையே ஆரம்பம் முதலே உருவாக்கி உள்ளது. அதனை உறுதிப்படுத்துவதாகவே ரணில் விக்கிரமசிங்காவின் சமகால நிகழ்வுகளும் அமையப்பெறுகிறது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்காவின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடலின் நடைமுறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்ட...