Posts

Showing posts from 2024

2024ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்றமும்! இறக்கமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
வரலாற்றை சரியாக புரிந்து கொள்வதனூடாகவே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீராக கட்டமைக்க முடியும். எனினும் ஈழத்தமிழரசியலில் கடந்த காலத்திலிருந்து படிப்பினையை பெறுவதும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சீர்செய்வதும் பலவீனமான பக்கங்களாகவே அமைகின்றது. 'வேட்டையாடும் சிங்கக்கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடையும் போது தனது வியூகத்தை மூன்றாவது தடவை மாற்றி அமைத்திடும்' என பிராணிகளின் நடத்தையியல் விஞ்ஞானக்கூற்று காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியல் கடந்த ஒரு நூற்றாண்டு கால விடுதலைப் போராட்ட அரசியலில் வினைத்திறனான அணுகுமுறையை கண்டுபிடிக்காது, வெறுமனவே கடந்த கால மாஜஜாலங்களுக்கு அரசியலை நிரப்பும் நிலைமைகளே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்தகையதொரு ஆண்டாகவே 2024ஐயும் நிறைவு செய்துள்ளார்கள். கடந்த காலங்களை போலல்லாது 2024 ஈழத்தமிழரசியலில் நிறைவான படிப்பினையை வழங்கியுள்ளது. இக்கட்டுரை 2024ஆம் ஆண்டு ஈழத்தமிழரசியலின் வெற்றி-தோல்விகளை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்பது முதன்மையான உரையாடலாக காணப்பட்டது. இம்மாற்றம் பற்றிய உரையாடலுக்குள் ஈழத்தமிழர்களின் ...

2024 நடப்பு அரசாங்கங்களுக்கு கல்லறையாகியது! புதிய வருடம் ஆட்சியினை பாதுகாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
'எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.' இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும் எதுவும் புதிதாக தோன்றிவிடப்போவதில்லை. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட அன்றாட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கால அறிவுக்கு ஏற்றி, விரக்தியும் நம்பிக்கையும் சந்திக்கும் கட்டத்தினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய உளவியல் நிலையில் உள்ளனர். இந்த தற்போதைய நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்களைப் புரிந்து கொள்ள, கடந்த கால நிகழ்வுகளைப் படிக்க வேண்டும். ஏனெனில் கடந்த காலம் நிகழ்காலத்தை ஒளிரச் செய்யும் போது அது முக்கியமானது. எதிர்காலத்திற்கும் இதையே சொல்ல முடியும். எனவே, வரலாற்றாசிரியர்கள் நிகழ்வுகளைக் கையாள்வார்கள்; மற்றும் நிகழ்வுகளின் காரணங்களைப் படிப்பார்கள். ஆனால் நிகழ்வு வரலாற்றின் ஒரே நிறுவனர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2024ஆம் ஆண்டு உலக அரசியலும் பல புதிய மாற்றங்களை எதிர்காலத்துக்கு அனுப்பி உள்ளது. ஒரு சில...

இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணமும் குறியீட்டு அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கடந்த வாரம் மூன்று நாள் விஜயமாக இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பி உள்ளார். ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது. இந்தியா-இலங்கையின் மரபார்ந்த உறவுகளின் அடிப்படையிலும், ஜே.வி.பி-யின் ஸ்தாபக கால இந்திய எதிர்ப்புவாத வரலாற்று பின்புலத்திலும் இவ்விஜயம் அதிக எதிர்பார்க்கைகளை உருவாக்கியிருந்தது. அதேவேளை இலங்கையின் இனபிரச்சினை தீர்வு சார்ந்த இந்தியாவின் கடந்த கால ஈடுபாடுகளின் தொடர்ச்சியாய், ஈழத்தமிழர்கள் அரசியலிலும் அதிக கவனக்குவிப்பு காணப்பட்டது. குறிப்பாக அநுரகுமார திசநாயக்காவின் இந்திய பயணத்திற்கு முன்னர், தமிழ் மக்களின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான நியாயத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கடிதம் மூலம் இந்திய பிரதமரிற்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் கூட்டறிக்கை தமிழர்களின் எதிர்பார்ப்பை எதிர்நிலைக்கு தள்ளியுள்ளது. இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அதன் முக்கியத்துவத்தை இழந்துள்ளதை இனங்காண...

சிரிய உள்நாட்டு யுத்தம் அரபு-குர்துகள் போராக தொடர்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
பஷர் அல்-சதாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, புதியதொரு அமைதியான சிரியா உருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கு ஊடகங்கள் செய்தி தலைப்பு இட்டன. அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் அரசியல் தலைவர்கள் கிளர்ச்சிக் குழுவையும், ஆட்சி மாற்றத்தையும் புரட்சியாக வெகுவாக பாராட்டினார்கள். யாவரும் சிரியா உள்நாட்டு யுத்தத்தின் முடிவை சுட்டிக்காட்டினார்கள். அசாத்தை வில்லனாக காட்ட வேண்டும் என்ற முனைப்பிலும், ரஷ்யா சார்பு அசாத்தின் தோல்வி ரஷ்யாவின் வெளியுறவுத்தோல்வி என்ற முனைப்பிலோலுமே மேற்கின் சிரியா தொடர்பான பார்வைகளும் எண்ணங்களும் காணப்பட்டது. எனினும் அசாத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வடகிழக்கு சிரியாவில் குர்துகள் மீதான துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சி படையின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இக்கட்டுரை சிரிய உள்நாட்டு யுத்த தொடர்ச்சியை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-சதாத்தின் வீழ்ச்சியுடன், கவனத்தை ஈரான், துருக்கி மற்றும் ஈராக் எல்லைக்குட்பட்ட வடகிழக்கு சிரியாவிற்கு மாற்றியுள்ளது. அமெரிக்க ஆதரவு, குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கட்டுப்பாட்டில் உள்ள இந்...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போலிகள் அவிழ்கின்றதா! மக்கள் விழிப்படைவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் என்பது சர்வதேச ரீதியாகவே அதிகம் போலிகளால் கட்டமைக்கப்பட்டதாகவே அமைகின்றது. அதிகார சக்திகள் தமது நலன்களுக்குள் போலிகளை வடிவமைக்கின்றது. இது சர்வதேச மட்டத்திலிருந்து உள்ளூராட்சி மட்டம் வரை தொடர்கிறது. நவீன அரசறிவியலின் தந்தை என அழைக்கப்படும் மாக்கியவல்லியின் அரசியர் தொடர்பான பொருள்கோடல் ஒன்றில், 'முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றது' எனப் பதிவாகிறது. இது அரசியல் நடைமுறையின் போலி தன்மையே வெளிப்படுத்துகின்றது. அரசியல் கோட்பாடுகள் அறம், தர்மம் தொடர்பாக பாரியளவில் குறிப்பிடுகின்ற போதிலும், அரசியல் நடைமுறை என்பது வெறுமனவே விளைவு சார்ந்ததாகவே அமைகின்றது. கோட்பாடுகள் தத்துவார்த்தங்கள் யாவும் போலியான அரசியலின் முகமூடிகளாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசியலிலும் கடந்த கால ஆட்சியாளர்கள் போலிகளில் தம்மை வடிவமைத்த போதிலும், அவர்களது விளைவுகள் போலிகளை அடையாளப்படுத்துவதாக அமைந்தது. அவற்றின் படிப்பினைகளில் இருந்து ஆட்சி அமைத்துள்ள ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போலிகளை உரையாடல்கள் மூலம் மூடி மறைக்க முற்படுகின்றார்கள். இக்கட்டுரை கடந்த மூன்று மாத காலங்களில் அவிழ்க்கப்பட்டு...

அசாத் ஆட்சிக்கவிழ்ப்பு சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
மேற்காசியாவில்  நவம்பர்-27அன்று திடீரென மீள் உருப்பெற்றிருந்த சிரிய உள்நாட்டுப் போர் புதிய திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர்-08அன்று சிரிய கிளர்ச்சிப்படை சிரியாவின் தலைநகர் கைப்பற்றியதை தொடர்ந்து, ஜனாதிபதி பஷார் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறியதனை அறிவித்தனர். அதேவேளை சிரிய பிரதமர் காஜி அல்-ஜலாலி சுதந்திரமான தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இடைக்கால காலத்தை நிர்வகிப்பது குறித்து விவாதிப்பதற்காக கிளர்ச்சித் தளபதி அபு முகமது அல்-கோலானியை அழைத்திருந்தார். இது சிரியாவின் 13 ஆண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், அசாத் குடும்பத்தின் ஐந்து தசாப்த ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை முதன்மைப்படுத்தியுள்ளது. சிரிய உள்நாட்டு போர் வெறுமனவே அசாத் நாட்டைவிட்டு வெளியேறுவதால் நிறைவு பெறக்கூடியதா என்பதே, சிரிய அரசியல் வரலாற்றை தொடர்பவர்களின் கேள்வியாக அமைகின்றது. இக்கட்டுரை சிரிய கிளர்ச்சிப்படையால் தலைநகர் டமஸ்காஸ் கைப்பற்றப்பட்ட பின்னதான அரசியல் நிலைமைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷhர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்கு ப...

பயங்கரவாத தடைச்சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் அதிகாரத்திற்கான தந்திரோபாயமாக பயன்படுத்துகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
கேலிச்சித்திரம் ஒன்றில் ‘PTA’ (பயங்கரவாத தடைச் சட்டம் - Prevention Terrorist Act) என்பதை குறிக்கும் வகையில் ‘Power To Anura’ (அனுராவுக்கு அதிகாரம்) என்ற விரிவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு ஆட்சியாளரும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள உயர்ந்தபட்ச பிரயோகங்களை பயன்படுத்த பின்னின்றதில்லை என்ற நடைமுறையுடனேயே அனுரகுமார திசநாயக்கவும் இசைந்து போக ஆரம்பித்துள்ளார். அதன் ஓர் அங்கமாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகம் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் ஆட்சிக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கைதுகள் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினூடாக நெருக்கீடுகளை எதிர்கொண்டிருந்த தரப்பினர், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்களையும் கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்த ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி இன்று தமது அரசாங்க நடவடிக்கைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து வருகின்றமையே அதிக கவனத்தையும் விமர்சனத்தையும் உருவ...

மேற்காசியாவில் மீளுருப்பெற்றுள்ள சிரிய உள்நாட்டு போர் இரத்தக்களரி வரலாற்றின் நீட்சியாகும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் தொடர்பில் இலட்சியவாத கருத்துக்கள் பல கட்டமைக்கப்பட்டாலும், அரசியல் அதிகாரத்திற்கான மையத்திலேயே சுழலுகின்றது என்பதையே நடைமுறையான எதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது. சர்வதேச அரசியலை ஏதொவொரு வகையில் யுத்தம் பற்றிய செய்தி வீச்சு ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக மேற்காசியாவில் இரத்தக்களரி நிலையானது என்பது தவிர்க்க முடியாத எதார்த்தமாகவே மாறியுள்ளது. ஓராண்டை கடந்து நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லாவின் ஈடுபாடு மற்றும் ஈரானின் உள்ளடக்கம் பிராந்தியப் போருக்கான அச்சுறுத்தலை உருவாக்கியிருந்தது. இது நிலையான முடிவற்ற சூழலில், மேற்காசிய பிராந்தியத்தில் மற்றொரு உள்நாட்டு யுத்தம் என்பது மீள உருக்கொண்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டு யுத்தம் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. மேலும், இவ்யுத்தம் அதிகளவில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தலையீட்டால் பாதிக்கப்படுகின்றது. அரசு படைகளுக்கு ரஷ;சியா மற்றும் ஈரானின் ஆதரவு கிடைப்பதுடன், கிளர்ச்சிப்படைகளுக்கு அமெரிக்க ஆதரவு வழங்கி வந்துள்ளது. இக்கட்டுரை 2024இன் இறுதியில் மீள உருக்கொண்டுள்ள சிரிய உள்நாட்டு யுத்தத்தின் அரசியல் தாக்கத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்...