2024ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்றமும்! இறக்கமும்! -ஐ.வி.மகாசேனன்-

வரலாற்றை சரியாக புரிந்து கொள்வதனூடாகவே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீராக கட்டமைக்க முடியும். எனினும் ஈழத்தமிழரசியலில் கடந்த காலத்திலிருந்து படிப்பினையை பெறுவதும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சீர்செய்வதும் பலவீனமான பக்கங்களாகவே அமைகின்றது. 'வேட்டையாடும் சிங்கக்கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடையும் போது தனது வியூகத்தை மூன்றாவது தடவை மாற்றி அமைத்திடும்' என பிராணிகளின் நடத்தையியல் விஞ்ஞானக்கூற்று காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியல் கடந்த ஒரு நூற்றாண்டு கால விடுதலைப் போராட்ட அரசியலில் வினைத்திறனான அணுகுமுறையை கண்டுபிடிக்காது, வெறுமனவே கடந்த கால மாஜஜாலங்களுக்கு அரசியலை நிரப்பும் நிலைமைகளே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்தகையதொரு ஆண்டாகவே 2024ஐயும் நிறைவு செய்துள்ளார்கள். கடந்த காலங்களை போலல்லாது 2024 ஈழத்தமிழரசியலில் நிறைவான படிப்பினையை வழங்கியுள்ளது. இக்கட்டுரை 2024ஆம் ஆண்டு ஈழத்தமிழரசியலின் வெற்றி-தோல்விகளை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்பது முதன்மையான உரையாடலாக காணப்பட்டது. இம்மாற்றம் பற்றிய உரையாடலுக்குள் ஈழத்தமிழர்களின் ...