சீனா - இந்தியா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆசிய நூற்றாண்டுக் கனவை நிர்மூலமாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
2020ஆரம்பத்திலிருந்தே உலகம் ஓர் பதட்டத்துடனேயே அரையாண்டை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகை மரண ஓலங்களில் நிலைநிறுத்;தியது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத சூழலில் மரண ஓலங்களின் நடுவே உலகம் கொரோனாவோடு வாழப்பழகிக் கொண்டது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அரசியல், பொருளாதார தாக்கங்களை உலகம் தற்போது அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளது. கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கு ஆசியாவின் நூற்றாண்டு என்பது உறுதி செய்துவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவை சூழ்ந்துள்ளது. அந்த அச்சத்தின் விளைவாய் தான் இந்தியா - சீனா எல்லை முரண்பாட்டில் இந்தியாவிற்கு உதவி என்ற பேரில் நுழைந்து இந்தியாவையும் சீனாவையும் போர் வலயமாக்கி இருநாடுகளையும் அமெரிக்க முடக்க நினைக்கிறதா என்ற ஐயப்பாடு சர்வதேச ஆய்வாளர்களிடையே உருவாகியுள்ளது. அதனை தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக ஆதிக்கம் என்பது நிலையான சொத்து இல்லை. அது நூற்றாண்டுகளில் மாறி மாறி நிலை பெற்றுள்ளது. நாடுகாண் பயணங்கள் வரையில் நாடுகளுக்கு இடையில் ஆதிக்க உணர்வுகள் பரவலாக காணப்படாமையால் உலக ஆதிக்க சிந்தனை எழுச்சியுறவில்லை. நாடுகாண் பயணங்களின் வளர்ச்சி 16ஆம்