ஜெயவர்த்தனாவின் நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் அரங்கேற்றும் இருபதாவது திருத்தம் -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் 20வது சீர்திருத்தம் என்பது நீண்டதொரு விவாதத்தை பல்கோணத்தில் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்பால் ஆளுந்தரப்பினுள்ளேயே முரண்நகையான கருத்துக்களே 20வது சீர்திருத்தம் தொடர்பில் பொதுவெளியில் அலசப்படுகிறது. 20வது சீர்திருத்தத்தை எதிர்ப்போர் அதன் வடிவமாக, அது இலங்கையில் சர்வதிகாரத்தை கட்டமைக்கப்போவதாகவும், ஜனநாயகத்தின் புதைகுழியாகவும் சித்தரிக்கிறார்கள். இந்நிலையில் இக்கட்டுரையானது 20வது சீர்திருத்தத்தின் வடிவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 20வது சீர்திருத்தம் பிரதானமாக கடந்த மைத்திரி – ரணில் தேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 19வது சீர்திருத்தத்தை நீக்குவதையே ஆழமான கருத்தியலாக கொண்டுள்ளது. இந்நிலையில் 19வது சீர்திருத்தத்திற்கு பிரச்சாரமாக வழங்கப்பட்ட ஜனநாயக மீட்பு என்ற வடிவமானது, 19வது சீர்திருத்தத்தை நீக்க 20வது சீர்திருத்தம் வடிவமைப்பதால் 20வது சீர்திருத்திற்கான வடிவத்தை பிரச்சாரம் செய்வதில் ஆழமாக செல்வாக்கு செலுத்துகிறது. அதனடிப்படையில் முதலில் 19வது சீர்திருத்தத்தை ஆதரித்தோரால் 19வது சீர்திருத்தம் ஜனநாயக மீட்பு என வடிவம் கொடுத்து செய்யப்பட்ட ...