தீர்வு முயற்சி மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடல்கள் சமகாலத்தில் உயர்வீச்சில் இடம்பெற்று வருகின்றது. தேசிய இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தொரு நிகழ்வாகும். அடுத்த வருடம்(2023) பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெறப்பட்டிருக்கும் என்ற பிரச்சாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முன்னெடுத்து வருகின்றனர். எனினும், ஜனாதிபதி தீர்வு உள்ளடக்கம் தொடர்பிலான தெளிவான கருத்தினை முன்வைக்கவில்லை. தமிழ் அரசியல் தரப்பினர் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் அதேவேளை தென்னிலங்கையில் ஒரு தரப்பினர் 13ஆம் திருத்தத்திறகான ஆதரவை முன்னிறுத்துவதுடன் இன்னொரு தரப்பு அதிகார பகிர்வு எனும் விடயத்தையே முழுமையாக நிரகரிப்பவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையில் அதிகார பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர்-13அன்று ந...