கொரோனா தொற்றின் அதிகரிப்பிற்கு காரணம்: ஆட்சியாளர்களதும் மக்களதும் அசமந்த போக்கு? -ஐ.வி.மகாசேனன்-
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து உலகம் தொடர்ச்சியாக இயற்கையா ஆகவும் செயற்கையாகவும் பல பேரிடர்களில் சுழன்று வருகின்றது. அவற்றுள் கொரோனா வைரஸின் பரவுகையால் மக்கள் உயிரை பறிக்கும் கோவிட்19 நோய் தீர்வற்ற சுமையாய் தொடர்கின்றது. 2020இன் ஆரம்பத்தில் கொரோனா வைரஸின் தொற்றானது சீன பெருநிலப்பரப்பில் மாத்திரமே கொலைத்தாண்டவத்தை அரங்கேற்றி யது. ஆயினும் உலக நாடுகளின் அசமந்த போக்கினால் இன்று 206 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் வரையில் கொரோனோ வைரஸின் தொற்று பரவியுள்ளது. உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது. உலக அளவில் பதினாறு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். உலக நாடுகளில் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் அசமந்த போக்குடன் தாராள சனநாயக ஆட்சி பண்புகளும் உலகமயமாக்கலின் வளர்ச்சியுமே கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்த முடியாது போனதுக்கு காரணமாகியுள்ளது. இதனடிப்படையில் குறித்த கட்டுரையானது உலக நாடுகளில் நிலவிய அசண்டைகளால் கொரோனா வைரஸ் பரவுகை கட்டுப்படுத்த முடியாது சென்றுள்ளமையை விபரிக்கின்றது. கொரோனா வைரஸின் ஆரம்ப பரவலானத...