Posts

எத்தியோப்பியா உள்ளக மோதல்; பிராந்திய மோதலாக பரிணமிக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் கொரோனாவிற்கு எதிரான போரை நிகழ்த்தி கொண்டிருக்கும் சமகாலப்பகுதியில் ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவின் வடக்கில் மோதல்கள் எல்லைகள் முழுவதும் பரவி, ஒரு மூலோபாய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றன. உள்நாட்டு ஆயுதப்போர் கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தி வருவதுடன் இலட்சக்கணக்கான மக்களை நாடற்ற அகதிகளாக இடம்பெயர செய்துள்ளது. எத்தியோப்பியாவில், டைக்ரேயின் வடக்கு பகுதியில், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி ( TPLF - Tigray People's Liberation Front ) மற்றும் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான உள்நாட்டு பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் இருக்கும் 2.3 மில்லியன் குழந்தைகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையிலேயே சர்வதேச சமகால அரசியல் விவாகரத்தை ஆராயும் இக்கட்டுரை எத்தியோப்பியாவின் போரின் பின்னணியையும் அதன் விளைவையும் தேட முற்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா தேசத்தில் எழுந்துள்ள போர் முழக்கம் ஆபிரிக்காவின் நிம்மதியை சீர்குலைத்துள...

தடுப்பு மருந்தை அரசியலாக்குவது கோவிட் தொற்றை அதிகரிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
முழுமையான உலகிலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என அனைத்து துறைகளிலுமே 2020ஆம் ஆண்டு முழுமையாக தவிர்க்க முடியாத சொல்லாக கொரோனா வைரஸ் வியாபித்திருந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிறைவடைகின்ற சூழலிலும் கொரோனா வைரஸின் தாக்கம் முற்றுப்பெறாத தொடராகவே நீள்கிறது. உலக நாடுகள் யாவற்றிலுமே இரண்டாம், மூன்றாம் அலைகள் என கொரோனா இடைவிடாது அழிவுகளை ஏற்படுத்தி கொண்டே உள்ளது. மறுபுறம் உலக நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் கொரோனா வைஸால் ஏற்படுத்தப்படும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் பரிசோதனைகளிலும் மும்மரமாக உள்ளனர். ஓராண்டு காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக தடுப்பு மருந்தை பூரண பரிசோதனை முறைகளினை பின்பற்றி கண்டுபிடிக்க முடியுமா என்பது தேடலாக காணப்படுகின்ற போதிலும் உலகின் பல நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். எனிலும் தடுப்பு மருந்து பிரயோகத்திலும் சர்வதேச அரசியல் போட்டி கடுமையாக தாக்கத்தை செலுத்தி வருகின்றது. அதனடிப்படையிலேயே இக்கட்டுரையும் கோவிட்-19 தடுப்பு மருந்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்வதேச அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 த...

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் மீதான ஆதிக்கம்; ஓபாமா காலத்திலேயே வலுவிழக்கப்பட்டதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச செய்திகளில் முதன்மையாக உலாவிய பெயரொன்று மீள சமீபத்தில் பேசுபொருளாகி வருகிறது. அமெரிக்காவின் கறுப்பின தங்கம் பராக் ஒபாமா எனும் முன்னாள் வல்லாதிக்க அதிபதியின் பெயரே மீண்டும் சமீபத்திய சர்வதேச செய்திகளில் அவரது எழுத்துக்களால் பரபரப்பாக பரபரப்பாக பேசப்படுகிறது. பல அறியப்படாத சுவாரஸ்யமான அரசியல் நடப்புக்களை அரசியல் தலைமைகளின் சுயசரிதை நூல்களூடாக அறியலாம் என்ற எதிர்பார்க்கையுடன் அரசியல் தலைமைகளின் நூல்களுக்கு என்றும் தனி ஆவல் வாசகர்களிடையே காணப்படும். அதிலும் முன்னாள் உலக வல்லாதிக்க அதிபதியின் நினைவுக்குறிப்பு சார் நூல் என்கையில் பல சுவாரஸ்ய அரசியல் நினைவுகள் சர்வதேச வெளியில் புதிதாக உலா வரும் என்ற எதிர்பார்க்கை சர்வதேச அரசியல் வாசகர்களிடையே அதீதமாக காணப்பட்டது. அதற்கு தீனி போடும் வகையிலேயே பராக் ஒபாமாவின் நினைவு குறிப்பு நூலும் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பராக் ஒபாமாவின் நினைவுக்குறிப்பையும், அது வெளிப்படுத்தும் அமெரிக்க அரிசியலை உள்பார்வையாக தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைமையை 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்...

கிர்கிஸ்தான் அரசியல் குழப்பத்தால் ரஷ்சியாவின் உறவு சீர்குலையுமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
மத்திய ஆசியா என்பது சமீபத்திய சர்வதேச அரசியலில் போராட்ட களமாகவே உருவகப்படுத்தப்பட்டு வருகிறது. முடிவில்லா போர்க்களமாக மாறியுள்ளது ஆர்மீனியா எதிர் அஜர்பைஜான் மோதல். மறுபக்கம் பெலாரஸ், மொன்ரிநீக்ரோ, வரிசையில் தற்போது கிர்கிஸ்தானிலும் நடைபெற்று முடிந்த தேர்தலை மையப்படுத்தி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளது. எனிலும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளின் போராட்ட பின்னனியிலிருந்து கிர்கிஸ்தான் போராட்ட பின்னனி வேறுபடுகிறது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டம் ஜனநாயகத்துக்கான மக்கள் புரட்சியாகவே சர்வதேச அரசறிவியலாளர்களால் நோக்கப்படுகிறது. அதனடிப்படையில், இக்கட்டுரையும் கிர்கிஸ்தான் போராட்ட பின்னனிகள் மற்றும் நிலைமைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டத்தை தேடுவதாயின் அதன் புவியியல் அமைவிடமும் அவசியமாகிறது. கிர்கிஸ்தான் நாடு வடக்கே கஜகஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், மற்றும் தெற்கிலும் கிழக்கிலும் தஜிகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையாக உள்ளது. 1876ஆம் ஆண்டில், இது ரஷ்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறியது, ரஷ்சிய புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் கிர்கிஸ் சோவியத் சோசலிச குடிய...

சீனா சார்பு நிலைக்குள் 'சூகி'யின் தலைமையில் மியான்மர் நகருமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையை ஒத்த அரசியல் சூழமவை கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடாகிய மியான்மர் நவம்பர் முற்பகுதியில் தனது மூன்றாவது பொதுத் தேர்தலை ஆறு தசாப்தங்களில் நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில் நடாத்தி முடித்துள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும், தற்போது தென்கிழக்கு ஆசிய அரசு அதன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலை நடாத்தி உள்ளது. இது சர்வதேச அரசியல் நிபுணர்களால் உற்றுநோக்கப்பட்டதொரு பொதுத்தேர்தலாக அமைகிறது. ஏனெனில் நீண்ட கால இராணுவ ஆட்சிக்கு பின்னராக 2015ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை மீளத்திருப்பிய ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் பன்மடங்கு சவால்களை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ள மியான்மரின் எதிர்கால அரசியல் போக்கினை கடந்த கால மியன்மரின் அரசியல் அனுபவத்திலிருந்து தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ஆம் திகதி மியான்மர் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் 7 மாநில சட்டப்பேரவைகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 92 அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன பிரச்சாரங்களைச் சேர்ந்த 6,900க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 1,171 இடங்களில் தேர...

அஜர்பைஜான், ஆர்மீனியா விவகாரம்; நகர்னோ - கரபாக் மையப்படுத்தி மூளும் பிராந்திய மோதல்? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் போர் என்பது தவிர்க்க முடியாத தொடர்கதையாகவே நீள்கிறது. ஒருபோர்ப்பதட்டம் தணியும் சூழலில் ஏதோவொரு மூளையில் இன்னொரு போர்ப்பதட்டம் ஏற்படவே செய்கிறது. அது சார்ந்து உலகமும் இருதுருவமாவதும் சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத பதிவாகிறது. சமகாலத்தில் சர்வதேச அரசியலில்உன்னிப்பாக அவதானிக்கப்படும் போராக அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையில் மூண்டுள்ள போரே காணப்படுகிறது. அதனடிப்படையில் இவ் சர்வதேச அரசியல்கட்டுரையும் அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையிலான போரை மற்றும் போரின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜானினதும், ஆர்மேனியாவினதும் எல்லையில் காணப்படும் ‘நகர்னோ கரபாக்’ என்ற பிரதேச உரிமம் தொடர்பான விவகாரமே, அஜர்பைஜானிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையில் நீட்ச்சியான போரியல் வரலாற்றை உருவாக்கியுள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பிளவுபடுவதற்கு முன்னர், இரண்டு நாடுகளும் அதன் அங்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியத்தின் இருப்பின் கீழேயே இவ்நாடுகளிடையே நகர்னோ கரபாக்-ஐ மையப்படுத்திய முரண்பாடு ஆரம்பிக்கப்பட்டு விட்டது.  சோவியத் ஒன்றியத்தின் கீழ், ஜோ...

கருத்துக்கணிப்புக்களை கடந்து ட்ரம்ப் இரண்டாவது தடவை அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா இடைவிடாது உலகை உலுக்கி வருகின்ற போதிலும் கடந்த ஒரு மாதங்களாய் சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மையான இடத்தை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலே கைப்பற்றியது. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ( Donald Trump ) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் ( Joe Biden ) களமிறங்கியிருந்தார்கள். கடந்த நம்பர்-03ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது.  வழமைக்கு மாறாக இம்முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெரும் சர்ச்சைகளை சர்வதேச செய்திகளில் உலாவ விட்டுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சர்ச்சைகளின் தார்ப்பரியங்களையும், தேர்தலின் ஆரம்ப முடிவுகள் வெளிப்படுத்தும் எதிர்பார்க்கைகளையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவுகை அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு தபால்மூலமான வாக்களிப்புக்கள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர்-03 வாக்களிப்பு தினத்திற்கு முன்னரும்  9.5 மில்லியன் அமெரி...