Posts

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் பொதுக்கட்டமைப்பினாலேயே சாத்தியப்படுத்தக்கூடியது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட வேண்டும். பெருமளவில் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்கும் நிலைப்பாடுகளே அதிகளவில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் அரசியலை மையப்படுத்தி இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் முடிவுகள் தமது தேர்தல் அரசியல் நலன் மீதான அக்கறையுடன் தொடர்புற்றதாகவே காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே அரசியல் கட்சிகள் மூன்று கோணங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழ் சிவில் சமுகங்களும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் போதிய அக்கறையை வெளிப்படுத்தாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தலை தமிழ் சிவில் அமைப்புக்கள் கையாள வேண்டிய...

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தெரிவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த ஒரு சில வாரங்களாக தமிழ் அரசியல் தரப்பினரிடையே தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் வலுப்பெற்று வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எதிரான வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் அரங்கிற்கு தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான உரையாடல் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகவே அமைகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசிய கருத்தியலில் வலுவான நிலையை பெற்றுள்ள தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல், 2024களிலேயே தமிழ் அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது தனியன்களின் அரசியலாகவே அமைந்துள்ளது. தமிழ்த்தேசியத்தின் மக்கள் ஆணைக்கான கருத்தியலை கொண்டிருக்கவில்லை. தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ்த்தேசிய சித்தாந்தரீதியிலான கருத்தாகவே அமைகின்றது. இங்கு தமிழ்த்தேசிய அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்தியே அரசியல் கட்டமைக்கப்படுகின்றது. இந்த தெளிவுடனேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பளரை நிறுத்துவது தொடர்பிலான உரையாடலை தமிழ் அரசியல் கட்சிகள் நகர்த்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளரை தனியனாக சிந்திப்ப...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவும் நிராகரிப்புக்கான சதிக்கோட்பாடுகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பிலான கருத்தாடல் பிரதான பேசுபொருளாகி தமிழரசியல் பரப்பில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. கருத்தியலாளர்களை ஒன்றிணைத்து 'மக்கள் மனு' எனும் தலைப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்பு, தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியதை தொடர்ந்து கடந்த வாரம் மட்டக்களப்பில் ஒழுங்குபடுத்தியிருந்தது. பொதுமக்களிடம் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டு வரும் விழிப்பு அரசியல் கட்சிகளையும் அது தொடர்பில் விவாதிக்க தூண்டியுள்ளது. இந்நிலையிலையே கடந்த வாரம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதேவேளை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இக்கட்டுரை தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு தொடர்பிலான வாதங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் த...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்துவதற்கான களம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய தேவை தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகின்றது. எனினும் கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நரித்தனத்தால், ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடைபெறுமா என்பதில் இலங்கை அரசியல் அவதானிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பலமான கேள்விகள் காணப்படுகின்றது. சமதளத்தில் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களில் தென்னிலங்கை கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகளும் முறையே சஜித் பிரேமதாசா மற்றும் அநுரகுமார திசாநாயக்காவை தமது ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவித்துள்ளது. இப்பின்னணில் தமது கூட்டை உருவாக்குவதற்கான பேரம்பேசல்களை முன்னெடுத்து வருகின்றன. ஆளுங்கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவே பெரும் குழப்பகரமான சூழலில் காணப்படுகின்றது. அவ்வாறே தமிழ் அரசியல் தரப்பிலும் ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ் அரசியல் தரப்பின் கடந்த கால அரசியல் நகர்வுகளை அலசுவதனூடாக இவ்...

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களம் தேர்தலுக்கான கொதிநிலையை பெற்றுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்களிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் முதன்மையான விவாதமாக உள்ளது. ஈழத்தமிழரசியலில் கருத்தாளர்கள் தளத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் வாய்ப்புக்கள் தொடர்பான உரையாடல் முனைப்பை பெற்றுள்ளது. எனினும் அரசியல் தரப்பினரும் சிவில் சமுகத்தினரும் இலங்கையின் தேர்தல்கள் தொடர்பில் முனைப்பான உரையாடல்களும் செயற்பாடுகளுமற்ற நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டின் பற்றாக்குறையினையே வெளிக்கொணர்கின்றது. இவ்இயல்பின் வெளிப்பாடே எதிரிக்கு எதிரி நண்பன் எனும் பொதுப்புத்தியில் ராஜபக்ஷhக்களை தோற்கடிப்பது எனும் ஒற்றை இலக்குடன், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களை கையாண்டு வருகின்றனர். இந்த நடத்தையிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் கொள்கையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதி தேர்தலை கையாள வேண்டுமென்பதே ஈழத்தமிழரசியல் கருத்தாளர்களின் வெளிப்பாடாக அமைகின்றது. இப்பின்னணியில் 2024ஆம் ஆண்டு த...

புடினின் உளவியல் தந்திரோபாய விளையாட்டு அமெரிக்க தேர்தலின் முடிவினை தீர்மானிக்குமா? -சேனன்-

Image
2024ஆம் ஆண்டு உலக அளவில் ஜனநாயக திருவிழாவிற்குரிய காலமாகவே காணப்படுகின்றது. உலகின் ¼ பகுதி நாடுகள் தேர்தலை எதிர்கொள்கின்றது. குறிப்பாக இலங்கையர்களாக நாம் ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற அரசியல் விளையாட்டை இரசித்து கொண்டுள்ளோம். அதேவேளை உலகப்பரப்பில் ரஷ்சியா மற்றும் அமெரிக்க தேர்தல்கள் முதன்மையான கவனத்தை பெற்றுள்ளது. மார்ச் 15-17 நடைபெற்ற ரஷ்சியா ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மறுதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீளவும் குடியரசுக்கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் ரஷ்சிய அரசின் ஈடுபாடு காணப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு மீள அரசியல் அவதானிகளிடையே பரவலான கவனத்தை பெற்றுள்ளது. எனினும் புடின் தனது பிரச்சார காலத்தில் பைடனுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் அமெரிக்க-ரஷ்சிய இராஜதந்திர மட்டத்தில் அதிக கவ...

ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச, பிராந்திய அரசுகளின் பார்வையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையாக  தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா  முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக பகுதியளவில் இடம்பெற்ற சில கருத்துக்கணிப்புக்களும், 2022இல் இடம்பெற்ற அரகலயாவில் ஜே.வி.பி கட்சியின் தாக்கமும் அனுரகுமார திசாநாயக்க மீதான பார்வைக்குவிப்புக்கு காரணம் எனலாம். எனினும் அனுரகுமார திசாநாயக்க மீது போலியானதொரு விம்பம் கட்டப்படுவதை பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்பகுதியிலும் முன்னைய கட்டுரையொன்றில் உரையாடப்பட்டுள்ளது. தென்னிலங்கையை மையப்படுத்தி அனுரகுமார திசாநாயக்கா மற்றும் ஜே.வி.பி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தற்போது சிறுபான்மை தேசிய இனங்கள் பக்கமும் திருப்பப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே,  ஈழத்தமிழர்கள் அனுரகுமார திசாநாயக்கா மற்றும் ஜே.வி.பி தொடர்பில் நம்பிக்கையை வைக்கலாமா என்பதை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் அரசியல் தென்னிலங்கையை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் வ...