தமிழர் அரசியல் பரப்பில் மாற்றுத்தலைமை உருவாக்கத்திற்கான தேவைப்பாடு -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் தேர்தல் நிலவரங்கள் கடுமையாக சூடுபிடித்துள்ளது. வடக்கு – கிழக்கிலும் தேர்தல் பிரச்சாரங்கள் கொரோனா அபத்தத்தையும் தாண்டி வேகமாக நடந்து கொண்டுள்ளது. காப்பெற் தெருக்கள், மதில்களிலெல்லாம் வேட்பாளர்கள் புள்ளடிய போராட ஆரம்பித்துவிட்டார்கள். வடக்கு – கிழக்கில் மொததமாக உள்ள 29 ஆசனங்களுக்காக 1768 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர். இதில் முதன்மையான அணிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பனவே காணப்படுகிறது. தமிழ் அரசியலில் மாற்றுத்தலைமையை பற்றிய உரையாடல் இம்முறை கோலோச்சிக்காணப்படுகிறது. 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே அரசியலில் ஏகபிரதிநிகளாய் இருந்து வந்துள்ளனர். எனிலும் இம்முறை குறித்த ஏகபிரதிநிதித்துவம் என்பது சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மாற்று அணிகள் மாற்றுத்தலைமைகளாக உருவாகக்கூடிய வல்லமைகளை பெற்று வருகின்றமை வெளிப்படையாய் தெரிகிறது. எனிலும் தொடர்ச்சியாய் தேர்தல் பிரச்சாரங்களில் மாற்றுத்தலைமை என்பது தமிழர் அரசியலின் அழிவுப்...