காணமலாக்கப்பட்டோருக்கான உறவுகளின் நீதிக்கோரிக்கை -ஐ.வி.மகாசேனன்-

ஆகஸ்ட்-30 ஆம் திகதி உலகளவில் காணாமலாக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இலங்கையில் 1500 நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வீதியில் இறங்கி போராடி வரும் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகஸ்ட்-30 அன்று வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்துள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பனவும் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் ஆகஸ்ட்-30 காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் கீழ் காணமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி வரும் போராட்டங்களின் எதிர்காலம் பற்றி தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 2010இல் இருந்து தங்கள் உறவுகளுக்கான நீதி கோருவது தொடர்பாகச்செயற்பட்டு வரினும், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்பே நீதி கோரும் செயற்பாடு நீதிக்கான போராட்டமாக பரிணமித்தது. 2017இல் இருந்து வடக்கு, கிழக்கில் சுழற்சி முறையிலான உண்ணா வி...