இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஆபத்துக்கள்? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில், ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை சமர்ப்பிக்கிறது. எதிர்க்கட்சிகள் கொழும்பில் ஒன்று கூடி விலை உயர்ச்சிகளுக்கு எதிரான போராட்டங்களை நடாத்துகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கடைத்தெருக்களில் வரிசையில் நிற்கிறார்கள். இந்நிலைமையை பலரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்து செல்கிறார்கள். பொருளாதார நெருக்கடிகள் குறுகிய காலத்தில் மாற்று கொள்கைகள் மூலமாக சீர்செய்யக்கூடியதாகும். எனிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும். இக்கட்டுரையும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தரக்கூடிய அரசியல் விளைவுகளை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் உள்ளடங்களாக அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு எதிராக பிராந்திய அளவில் சிறுசிறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றாலும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் திரட்சியான போராட்டத்தை ஊக்குவிக்க இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி நீண்டகாலமாக தவறியிருந்தது. அத்துடன் மக்கள் சிறுதிரள் முன்னெடுக்கும் ஜனநாயக போராட்டங்களையும் கொரோனா சுகாதார விதிமுறைகளை காரணங்காட்டி அரசாங்கம் தடுத்து நிறுத்தி வந்தது. இந்நிலையிலேயே கடந்த நவம்பர்-16அன்று பல தடைகளின் மத்தியிலும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முறைகேடான மற்றும் செயற்றிறனற்ற நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றங்களில் தடையுத்தரவு கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2019இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், 6.9 மில்லியன் மக்கள் 'செழிப்பு மற்றும் சிறப்பு' என்ற கோஷத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்தனர். ஆனால் இவை அனைத்தும் இப்போது சிதைந்துவிட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் லக்சிறி பெர்னாண்டோ பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிலைமாறும் பொருளாதார கொள்கை செயற்பாட்டை, 'அரசாங்கம் அரசு-கட்டுப்பாடு மற்றும் சுதந்திர சந்தை ஆகியவற்றுக்கு இடையே ஜிக்-ஜாக்(ணுபை-ணயப pழடiஉநைள) கொள்கைகள் கொண்டுள்ளது. இதன் விளைவாக பொருளாதாரமும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.' எனச்சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஏறு;பட்டுள்ள பொருளாதார மந்த நிலையானது பொருளாதார நெருக்கடி என்ற நிலையிலிருந்து அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையாக பரிணமித்து விட்டமை கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் (ஆழழனல'ள ஐnஎநளவழசள ளுநசஎiஉந) ஒக்டோபர்-28(2021) வெளியிட்ட விசேட அறிக்கையில் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை ஊயய1 இலிருந்து ஊயய2 ஆகக்குறைத்துள்ளது. பணப்புழக்க அதிகரிப்பு மற்றும் செயலிழந்த அந்நிய செலாவணி சந்தைகள் உள்நாட்டு நாணயத்தின் மீதான நம்பிக்கையை இழப்பதால், கடனுக்காக மட்டுமல்ல தற்போதைய பரிவர்த்தனைகளுக்காகவும் கடன் அமைப்பு மூலம் செல்வத்தை நாட்டிற்கு வெளியே மாற்றுவதை கடினமாக்கியது. நாடு இறக்குமதிக்கான கடன் வரிகளையும் நாடும் நிலையில் காணப்படுகிறது. இதன் விளைவாக, நாட்டின் கடனை நடைமுறையில் கணிக்க இயலாத வகையில் ஊகதரத்திற்கு(ளிநஉரடயவiஎந-பசயனந) ஆழமாக எடுத்துச் சென்றுள்ளது. இவை இலங்கையின் இறையாண்மை தரவிறக்கச் செய்யும் நிலைமையை உருவாக்கியுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் பொருளாதாரரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நுணுக்கமாக மதிப்பிடுவது அவசியமாகும்.
ஒன்று, இலங்கையின் மனித வளம் இலங்கையிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகும். இது தொடர்பான செய்திகளை அண்மைக்காலமாக இலங்கை ஊடகப்பரப்பில் அதிகமாக கேலிச்சித்திரங்களில் அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது. இலங்கையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வரிசையில் நிற்க தொடங்கிய காலத்திலிருந்து இலங்கை குடியவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு முன்பாகவும் மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக தினசரி பெருநிரலில் நிற்கின்றார்கள். தற்காலங்களில் அலுவலக நேரத்தை தாண்டி இரவிலும் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இயங்கி வருகின்றது. இச்செய்தி இலங்கை மனித வளம் இலங்கையை வாழத்தகுதியற்ற நாடாக கருதி நாட்டை விட்டு வெளியேற நினைப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.
இரண்டு, இலங்கையினை முதலீட்டாளர்கள் தவிர்க்கும் நிலை காணப்படும். கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக முதலீட்டுக்கான பாதுகாப்பு இன்மையால் இலங்கை புவிசார் அரசியல் பொருளாதார ரீதியாக இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள தீவாக காணப்படுகின்ற போதிலும் முதலீட்டாளர்களால் தவிர்க்கப்படும் நிலைமை காணப்பட்டது. எனினும் 2009ஆம் ஆண்டு போர் நிறைவுற்றதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டு வந்த உட்கட்டமைப்பு வளர்ச்சியானது பொருளாதார முதலீடுகளை மையப்படுத்தியதாகவே காணப்பட்டது. குறிப்பாக துறைமுக நகர உருவாக்கம் முற்றுமுழுதாக பொருளதாரத்தை மையப்படுத்திய நகரமாகவே உருவாக்கப்படுகிறது. எனினும் இலங்கையில் அதிகரித்துவரும் அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் துறைமுக நகரத்தையும் நிராகரிக்கக்கூடிய சூழ்நிலையே அவதானிக்கப்படுகின்றது.
மூன்றாவது, இலங்கையின் இறையான்மை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனத்தின் விசேட அறிக்கையின் தரவும் இலங்கையில் அதிகரித்துவரும் கடன்சுமை இலங்கையின் இறையான்மையை பாதிப்படைய செய்வதாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் புவிசார் மற்றும் பூகோள அரசியல் முக்கியத்துவம் இலங்கையின் இறையான்மைக்கு அதிகம் நெருக்கீட்டை உருவாக்கக்கூடியதாகவே காணப்படுகின்றது. இந்நிலையமையில் அரசியல் பொருளாதார ரீதியிலான நெருக்கடி, இலங்கையை கடன்பொறிமுறையூடாக வல்லரசு சக்திகள் தங்கள் இசைவுக்கு இழுத்துச்செல்ல இலகுவாக அமைகின்றது. பொதுஜன பெரமுன அரசாங்கம் அண்மைக்காலத்தின் அதிகார சமநிலையை உருவாக்க முயலுகின்ற போதிலும் அதனை சீராக நெறிப்படுத்த முடியாமைக்கு சீனா சார்ந்துள்ள கடன் சுமை காரணமாகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நான்காவது, இலங்கையின் அரசியலில் காணப்படும் ஜனநாயக முறைமை அபாயத்துக்குள் செல்லக்கூடிய வாய்ப்பை அரசியல் பொருளாதார நெருக்கடிகள் உருவாக்கக்கூடியதாக அமைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. சர்வதேசரீதியிலான அனுபவத்தில் இராணுவப்புரட்சிகளூடாக உருவாக்கப்பட்ட இராணுவ ஆட்சிகள் அதிகளவில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து எழுச்சியுற்றதாகவே காணப்படுகிறது. போர் வெற்றியை முதன்மையான பிரச்சாரமூடாக தேசிய பாதுகாப்பை வலியுறுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆரம்ப நிலையிலிருந்தே இலங்கை ஆட்சிக்கட்டமைப்பில் அதிகம் இராணுவத்தினரை பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சின் செயலளார்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலணிகளில் இராணுவ தலையீடுகள் உயரளவில் காணப்படுகின்றது. இந்நிலையில் அதிகரித்து வரும் அரசியல் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்பு நிலைகளையும் சமாளிக்க இலங்கை அரசியல் முறைமை இராணுவவாதத்துக்குள் செல்லக்கூடிய சூழல் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்களிடையே விமர்சனம் காணப்படுகிறது.
ஐந்தாவது, இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் அனைத்தும் இனங்களுக்கிடையில் புரிதலற்ற சூழலை உருவாக்கி அதுவொரு பகைமை நிலையை உருவாகக்கூடியதென அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் உரையாடப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அரசியல் யதார்த்தவாதக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்கள், அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தியது என்ற அடிப்படையில் அவ்அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அரசாங்கங்கள் தமக்குள் ஏற்படு நெருக்கடிகளை வன்முறைகளுக்கூடாக கையாளும் பொறிமுறையொன்றை உருவாக வாய்ப்புள்ளதமாக சுட்டிக்காட்டுகின்றார்கள். இலங்கையின் வரலாற்றிலும் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்ள பெருந்தேசியவாத அலையை உருவாக்கி இனங்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்த அடித்தளமிட்டுள்ளார்கள். குறிப்பாக 1958ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா தனது ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்ள கையிலெடுத்த பெருந்தேசியவாத சிந்தனை போன்று அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அச்சந்தர்ப்பத்தை கையாண்டுள்ளனர் என்பது பதிவுகளாக உள்ளன. தற்போதும் அரசியல் பொருளாதார நெருக்கடி பொதுஜன பெரமுன அரசாங்கம் தொடர்பாக மக்களிடம் காணப்பட்ட நம்பிக்கையை சிதைத்துள்ளது. அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான ஜனாதிபதி செயலணி உருவாக்க வேண்டிய காலப்பகுதியில் ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படுவதும், அதற்கு அதிகம் பிற தேசிய இனங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் பெருந்தேசியவாத அடையாளத்தை நினைவூட்டுவதாகவே உள்ளது. இதனடிப்படையல் நாட்டில் மத மற்றும் இனப் பதட்டங்களைத் தூண்டுவதும், தீவிரப்படுத்துவதும் தான் அரசாங்கத்தின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்யும் நடவடிக்கையா என்ற விமர்சனம் தென்னிலங்கை அரசியல் ஆய்வுப்பரப்பில் முதன்மைப்படுத்தப்படுகிறது.
எனவே இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சாதாரண பொருளாதார நெருக்கடியாக கணித்து சென்றுவிடஇயலாது. அதன் உண்மை தன்மையை மக்களின் வாழ்க்கை நிலைமைகள், பொருளாதாரம், வெளிநாட்டு கையிருப்பு, அரசியல் அமைப்பு, அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மை, பொது நிர்வாகம், வெளிநாட்டு உறவுகள் மற்றும் அரசாங்கத்தின் அன்றாட முடிவெடுக்கும் செயல்முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இவை இலங்கை ஏற்கனவே கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்மையை வெளிப்படுத்தி நிற்கிறது. அந்நிய கையிருப்பு அல்லது கடன் போன்றவை நீண்ட காலமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பிணைந்துள்ள போதிலும் அதுசார்ந்த தற்போது ஏற்பட்டுள்ள பெரும் தாக்கங்கள் சமீபத்தியவையாகவே அமைகின்றது. இது தெளிவற்ற திறமையின்மை மற்றும் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளாகவே காணப்படுகின்றது. இதன்தொடர்ச்சியாய் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதால், அரசியல் அமைப்பில் ஒரு வலுவான இராணுவ அல்லது எதேச்சாதிகார பிடியை இறுக்குவதற்கு இது சாத்தியமாக்கக்கூடிய சூழ்நிலையும் அவதானிக்கப்படக் கூடியதாக உள்ளது.
Comments
Post a Comment