சுயமதிப்பீட்டுக்கு உட்படுமா கூட்டமைப்பு? -ஐ.வி.மகாசேனன்-

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய வாக்குகளின் சரிவில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளே பிரதான காரணமாகும். அதன் விளைவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அனுபவித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றிருந்த கூட்டமைப்பினர், 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 10 ஆசனங்களையே பெற்றிருந்தனர். இச்சரிவு 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளிலேயே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதனை சீராக பகுப்பாய்வு செய்ய தவறியதன் விளைவையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற தேர்தலில் அனுபவித்திருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்கள் சரிவுக்கான காரண காரியங்களை தற்போதும் சரியான பகுப்பாய்வை மேற்கொள்ள தவறியுள்ளார்களோ என்ற எண்ணத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில செயற்பாடுகள் ஏற்படுத்துகிறது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தொடரும் பலவீனங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சரிவை ஒர் அரசியல் கட்சியின் சரிவாய் மக்கள் மாற்று அரசியலை நாடுகின்றார்கள் என புறந்தள்ளி தமிழ்த்தேசிய அரசியலை நேசிப்பவர்களால் விலக...