சந்திரிகா-சிராணி கூட்டின் பொது எதிரணி உருவாக்கம் சாத்தியமாகுமா? -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கை அரசியலில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான உரையாடல்களே முதன்மையாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களிடையே அரசாங்கம் தொடர்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் ஆளும் ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியிடையே பிளவுகள்சார் உரையாடல்கள் அதிகரித்து வருகின்றது. அவ்வாறே எதிரணி கூட்டணிக்குள்ளும் தலைமைத்துவ போட்டிகள் நீடிக்கிறது. இந்நிலையிலேயே தென்னிலங்கை சிவில் சமூக தரப்பினரிடையே புதியதொரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி புதிய கூட்டணிக்கான உரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். புதிய கூட்டணிக்கான பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அடையாளப்படுத்துவதாக செய்திகள் முதன்மைப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் சந்திரிக்கா-சிராணி-தென்னிலங்கை சிவில் சமூக கூட்டு இணைந்து அடையாளப்படுத்தும் புதிய கூட்டணியின் வாய்ப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி அதுசார்ந்து மக்களிடம் அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையை சாதகமாக பயன்படுத்தி கொள்ள, எதிரணியிடையே மும்மரமா...