தடுப்பு மருந்தை அரசியலாக்குவது கோவிட் தொற்றை அதிகரிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

முழுமையான உலகிலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என அனைத்து துறைகளிலுமே 2020ஆம் ஆண்டு முழுமையாக தவிர்க்க முடியாத சொல்லாக கொரோனா வைரஸ் வியாபித்திருந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிறைவடைகின்ற சூழலிலும் கொரோனா வைரஸின் தாக்கம் முற்றுப்பெறாத தொடராகவே நீள்கிறது. உலக நாடுகள் யாவற்றிலுமே இரண்டாம், மூன்றாம் அலைகள் என கொரோனா இடைவிடாது அழிவுகளை ஏற்படுத்தி கொண்டே உள்ளது. மறுபுறம் உலக நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் கொரோனா வைஸால் ஏற்படுத்தப்படும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் பரிசோதனைகளிலும் மும்மரமாக உள்ளனர். ஓராண்டு காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக தடுப்பு மருந்தை பூரண பரிசோதனை முறைகளினை பின்பற்றி கண்டுபிடிக்க முடியுமா என்பது தேடலாக காணப்படுகின்ற போதிலும் உலகின் பல நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். எனிலும் தடுப்பு மருந்து பிரயோகத்திலும் சர்வதேச அரசியல் போட்டி கடுமையாக தாக்கத்தை செலுத்தி வருகின்றது. அதனடிப்படையிலேயே இக்கட்டுரையும் கோவிட்-19 தடுப்பு மருந்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்வதேச அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 த...