தேர்தல் வாக்குகளை கடந்து ஒற்றுமை இன்மை நிலவுமாயின்; வாழ்விடத்தை இழக்க நேரிடும். -மித்ரசகி-

கொரோனா அபத்த காலத்தை சாதமாக பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டுக்குள் இலங்கையை ஒன்றினைப்பதில் மும்மரமாக ஈடுபடுவதனை கொரோனாவிற்கு பின்னரான இலங்கை அரசியல் சூழல் தெளிவாக காட்டுகின்றது. சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்கலின் முக்கூட்டு ஆதிக்கம் அதீதமாக தமிழர்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கை மையப்படுத்தியே கட்டவிழ்த்து விடப்படுகின்றது. கொரோனா அபத்தத்தினுள் வாழப்பழகுவது என்பது இலங்கையில் தமிழர்களை ஒருங்கே சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டுக்குள்ளும் வாழப்பழக திணிக்கப்படுகின்றது. கொரோனா பேராபத்தினுள், சிதைக்கப்படும் தமிழர் தாயகம் பற்றிய எச்சரிக்கையினை மற்றும் எதிர்வினையினை ஆற்ற முடியாத சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகின்றது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பும் இலங்கையின் தமிழ்த் தலைவர்களும் ஒற்றுமைமையை சிதைக்கக்கூடிய திணிப்புகளுக்கு எதிராக பலமான எதிர்ப்பினை காட்டவும் முன்வருவதில்லை. அதனடிப்படையில் குறித் கட்டுரை தேர்தல் வாக்குகளுக்காக தமிழ் தலைமைகள் பிரிந்து செயற்படுவார்களாயின் தமிழர் தாயகத்தில் ஏற்படக்கூடிய தடுக்க முடியாத சிதைவுகளை விபரிப்பதாகவே உ...