சீனாவுக்கு எதிரான இந்தோ-பசுபிக்கை மையப்படுத்திய அமெரிக்காவின் வியூகம் நெருக்கடியை எதிர்நோக்குகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

அரசியல் அதிகாரத்துக்கான போட்டி ஆகும். சர்வதேச அரசியல் தொடர்ச்சியாக வல்லாதிக்க அரசுளின் அதிகார போட்டிக்கான களமாகவே காணப்படுகிறது. வல்லரசு சக்திகள் அணிகளை திரட்டி அதிகாரத்துக்கான போட்டியை தொடர்கின்றன. குறிப்பாக, பனிப்போர் காலம் உலகை இருதுருவமாக்கியது. பனிப்போருக்கு பின்னரான ஒற்றை மைய அரசியல் காலப்பகுதியிலும் அமெரிக்கா தனது அதிகாரத்தை நிலைநாட்ட கூட்டணிகளையே தொடர்ந்து பேணி வந்தது. இந்நிலையில் தற்போது அதிகரித்துள்ள சீனாவுடனான அதிகார போட்டியில் கூட்டணிகளூடாக சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.  இக்கட்டுரையும் சீனாவிற்கு எதிரான கூட்டணிகளை உருவாக்குவதில் அமெரிக்கா முனைப்பு செலுத்தினாலும் அதற்குள் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றது என்பதனை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கடந்த 70ஆண்டுகளில் அமெரிக்க கூட்டணி வலையமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மிக வெற்றிகரமான மற்றும் நீடித்த அம்சங்களில் ஒன்றாகும். இந்த கூட்டணிகள், முதலில் பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் சோசலிச விரிவாக்கத்திற்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க தனது தேசிய நலனை முன்னுறுத்தி இஸ்லாமியர்களுக்கெதிரான வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கத்திற்கு கூட்டணியை பயன்படுத்தியது. அமெரிக்காவும் அதன் ஜனநாயக கூட்டாளிகளும் எந்தவொரு சாத்தியமான போட்டியாளர்களையும் விட பெரும் பொருளாதார மற்றும் இராணுவ நன்மைகளைக் கொண்டுள்ளனர். இவ்வலுவான கூட்டணியை கொண்டு சோவியத் ஒன்றித்திற்கு எதிரான போட்டியிலும், இஸ்லாமிய எழுச்சியை கட்டுப்படுத்துவதிலும் அமெரிக்க  தன் இலக்குகளையும் அடைந்தே உள்ளது.

ஆனால் அமெரிக்கா இப்போது புதிய வலிமையான சவாலை எதிர்கொள்கின்றது. சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார, இராணுவ மற்றும் தொழில்நுட்ப செல்வாக்கிற்கு கூட்டாக பதிலளிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஐ.நா பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில், சீனாவை நேரடியாக குறிப்பிடாமல், 'நாங்கள் ஒரு புதிய பனிப்போர் அல்லது கடுமையான பிளவுகளாகப் பிரிக்கப்பட்ட உலகத்தை நாடவில்லை,' என்று கூறினார். எனினும் அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகள் யாவும் சீனாவுடனான அமெரிக்காவின் பனிப்போருக்கான உத்திகளையே உறுதி செய்கின்றது. குறிப்பாக, அமெரிக்க செனட் வெளிநாட்டு உறவுக் குழு பிடனின் நிர்வாகத்தின் கீழ் (2021) சீனாவுடன் ஒரு புதிய பனிப்போரின் மெய்நிகர் அறிவிப்பை உருவாக்கும் மூலோபாய போட்டி சட்டகத்தை (ளுவசயவநபiஉ ஊழஅpநவவைழைn யுஉவ - ளுஊயு) அங்கீகரித்தது.  அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சீனா மிகவும் தீவிரமான மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக மூலோபாய போட்டி சட்டகம் சித்தரிக்கிறது.  உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை சீர்குலைக்க தீர்மானிக்கப்பட்ட இரக்கமற்ற ஆக்கிரமிப்பாளர் என்று சீனா விவரிக்கப்பட்டுள்ளது.  சீனாவுடன் நல்ல உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி மூலோபாய போட்டி சட்டகத்தில் ஒரு குறிப்பு கூட காணப்படவில்லை.  சீனா, 'எதிர்கால சமாதானம், செழிப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் சுதந்திரத்தை ஆபத்தில் ஆழ்த்தும்' என்று அச்சட்டகம் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது. இதனை முன்னுறுத்தியே சீனாவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வருகிறது. ஐரோப்பா மற்றும் இந்தோ-பசிபிக் ஆகிய இரு பிராந்தியங்களிலும் உள்ள நட்பு நாடுகளை அரவணைத்து சீனா முன்வைக்கும் சவால்களை மிகவும் தீவிரமாக பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன. வழமையான ஜி-07, நேட்டோ என்பதை தாண்டி இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்தி புதிய கூட்டுக்களையும் உருவாக்கி வருகிறது.

ஒன்று, அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு கூட்டான நேட்டோவை சீனாவிற்கு எதிராக கட்டமைப்பதில் அமெரிக்கா மும்மரமாக இறங்கியுள்ளது. இருதுருவ அரசியல் ஒழுங்கில் ரஷ்சியாவிற்கு எதிரான பனிப்போர் காலத்திலிருந்து அமெரிக்காவின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான பாதுகாப்பு கூட்டாக நேட்டோ செயற்படுகிறது. இந்நிலையில் தற்போது அதிகரித்துவரும் சீனாவுடனான நெருக்கடியை சீர்செய்யவும் நேட்டேவை பயன்படுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் ஜூன்(2021) மாதத்தில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் நேட்டோ சீர்திருத்தம் மற்றும் மீளவோர் பனிப்போர் நகர்வுக்கான நேட்டோ தயார்படுத்தல் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் அதிகார போட்டியில் நேட்டோவின் பயன்பாடு தொடர்பிலேயே அதிகமாக உரையாடப்பட்டது. மேலும், அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் பிளிங்கன் கடந்த மார்ச்(2021) மாதம் மேற்கொண்ட தனது முதல் ஐரோப்பிய பயணத்தின் போது பிரஸ்ஸல்ஸில் தனது ஐரோப்பிய சகாக்களை சந்தித்து உரையாடினர். அவர் தனது உரையில், மின்சார கார்கள் முதல் பயோமெடிசின் வரையிலான பகுதிகளில் மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவும் சீனாவும் போட்டியிடுகையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கட்டிய சர்வதேச வர்த்தக ஒழுங்கை பெய்ஜிங் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், நேட்டோ தலைமையகத்தில் நின்று, 'சர்வதேச ஒழுங்குக்கான நமது நேர்மறையான பார்வையை உருவாக்க நாங்கள் ஒன்றாக வேலை செய்தால், எந்த விளையாட்டு மைதானத்திலும் சீனாவை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.' என்று சீனாவுடனான அமெரிக்காவின் அதிகார போட்டியில் நேட்டோ கூட்டணியின் ஈடுபாட்டை பிளிங்கன் வலியுறுத்தி இருந்தார்.

இரண்டு, அமெரிக்கா தனது மற்றொரு வர்த்தக பங்காளிகளான ஜி-7 கூட்டையும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க பேபாட்டியில் களமிறக்குவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் (2021) மாதம் லண்டனில் நடைபெற்ற ஜி-7 தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான தனது திட்டத்தை முன்மொழிந்தது. அதாவது சீனாவின் 'பி.ஆர்.ஐ' (டீநடவ யனெ சுழயன ஐnவையவiஎந) திட்டத்துக்கு மாற்றாக 'பி3.டபிள்யு' (டீரடைன டீயஉம டீநவவநச றுழசடன) திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டமும் பாதைகளாலும் சாலைகளாலும் கட்டமைக்கப்படும், 40 டிரில்லியன் டாலர் மதிப்பில் உருவாகும், ஏழை நாடுகளிலும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், ஜி7 நாடுகள் பங்கேற்கும், சீன ஏகாதிபத்தியம் முறியடிக்கப்படும் என்பனவற்றிற்கு அப்பால் இப்போதைக்கு பி3.டபிள்யு திட்டம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் மேலதிக விவரங்கள் எவையுமில்லை.

மூன்று, இந்தோ-பசுபிக் மூலோபாயத்திட்டம். அமெரிக்காவின் சீனாவிற்கெதிரான அதிகாரப்போட்டியில் கட்டமைக்கப்பட்ட பிரத்தியோகமாக திட்டமாக இது காணப்படுகிறது. இந்தோ-பசுபிக் என்பது சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இந்தோ பசுபிக் மூலோபாயத்திட்டம் நிறுவனமயப்படுத்தப்பட்டதொரு கட்டமைப்பாக நிறுவப்படாத போதிலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் பிரதான தாக்கத்தை செலுத்தியிருந்தது.  இந்தோ-பசுபிக் முதலில் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய இரண்டு பெருங்கடல் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சமுத்திர அரசியல் (ழுஉநயniஉ Pழடவைiஉள) கருத்து ஆகும். இது ஒரு புதிய கருத்து அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முறையாக, கடல்சார் மூலோபாய நிபுணர் மற்றும் புது தில்லி தேசிய கடல்சார் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் குர்பிரீத் எஸ். குரானா இந்தோ-பசிபிக் வியூகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.  ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்க நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தோ-பசுபிக் திட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார். ட்ரம்ப் பயன்படுத்திய இந்தோ-பசுபிக் என்ற கருத்து, வளர்ந்து வரும் மற்றொரு பனிப்போரில் சீனாவை தடுப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியோரின் இணைப்பாகும். இதனை நேட்டோ-2 (Nயுவுழு-2) என்ற பார்வையும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

நான்கு, குவாட் அமைப்பு. அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபயத்திட்டத்தின் நிறுவனமயப்படுத்தப்பட்ட முதல் முயற்சியாக உருவாக்கப்பட்டதே குவாட் அமைப்பாகும். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் என இரண்டு கடல்களைக் கொண்ட அகன்ற வெளியின் நான்கு புறமும் இருக்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் இணைவை குறிக்கும் வகையில், குவாட் என்ற வார்த்தைக்கு 'நான்கு புறமும் கட்டமைப்புகள் கொண்ட வெளி' என அர்த்தம் கூறப்படுகிறது. ஆனால், சீனா இந்தக் கூட்டணியைக் கடுமையாக எதிர்க்கிறது. காரணம், சீனாவுக்கு நான்கு மூலைகளிலும் இந்த நாடுகள் இருக்கிறது. குவாட் தலைவர்களின் முதல் நேரடிக் கூட்டம் அமெரிக்காவில் செப்டெம்பர்-24(2021)அன்று நடைபெறுற்றது. 'இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பாலும் பாதுகாப்பு மற்றும் செழிப்பை வலுப்படுத்த, சர்வதேச சட்டத்தில் வேரூன்றிய மற்றும் கட்டாயப்படுத்தப்படாமல், இலவச, திறந்த, விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை ஊக்குவிக்க நாங்கள் ஒன்றாக ஒப்புக்கொள்கிறோம்.'  எனக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் பெயர் குறிப்பிடாத போதிலும்,  சீனா அதன் தசைகளை வளைக்க முயற்சிக்கும் பிராந்தியத்தில் விதிகள் அடிப்படையிலான நடத்தைக்கு தலைவர்களின் வலியுறுத்தலை நான்கு தலைவர்களின் பொதுக் குறிப்புகளில் அல்லது நீண்ட கூட்டறிக்கை அடிக்கடி குறிப்பிடுகிறது.

ஐந்து, ஆக்காஸ் பாதுகாப்பு ஒப்பந்தம். அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா கூட்டிணைந்து கடந்த செப்டெம்பர்-15(2021) ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளார்கள். இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தினூடாக பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை அவுஸ்ரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன. உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு அவுஸ்ரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் அவுஸ்ரேலியாவிற்கு வழங்க இருக்கின்றன. இதனை சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் மற்றொரு கூட்டுக்கான முயற்சியாகவே சர்வதேச அரசியல் விவாதிக்கிறது. எனினும் அமெரிக்கா தரப்பால் உடனடியாகவே மறுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் எளிமையான புவிசார் விளக்கம் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாய கூறு என்பதை விளங்கி கொள்ளலாம்.

இவ்வாறாக அமெரிக்க அரசாங்கம் பல்வேறு கூட்டணி உருவாக்கங்களை உருவாக்கும் முயற்சியே சீனாவினை எதிர்கொள்வதற்கான கூட்டணி உருவாக்கத்தில் அமெரிக்கா கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதை விளங்கிக் கொள்ள ஏதுவாக உள்ளது. மேலதிகமாக சீனாவிற்கெதிராக உருவாக்கப்படும் கூட்டணி முயற்சிகளில் அமெரிக்க எதிர்கொண்டுள்ள இடர்பாடுகளையும் அறிதல் அவசியமாகும். 

முதலாவது, கூட்டணி வலையமைப்புக்குள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிளவுகளைச் சுரண்ட சீனா தனது பொருளாதாரத் திறனை மேம்படுத்துகிறது.  சீனாவுடனான உறவுகளைப் பற்றி அமெரிக்க நட்பு நாடுகள் ஒரே மனநிலையில் இல்லை. அல்லது பல சமயங்களில் அவர்கள் சீனாவின் நடத்தையை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி பற்றி வாஷிங்டனுடன் ஒன்றிணைகின்றனர். எனினும் மறுமுனையில் பெய்ஜிங் உடனான வர்த்தக தொடர்புகளால் பின்வாங்க முயலுகின்றனர். சீனா அதிகமாக பொருளாதார முதலீடுகளூடக அமெரிக்க நட்பு நாடுகளுடன் பிணைந்துள்ளது. இதனால் அமெரிக்க நட்பு நாடுகள் சீனாவினை பகைப்பதை தவிர்க்க முற்படுகின்றன. 

இரண்டாவது, அமெரிக்காவின் நீண்ட நாள் வர்த்தக பங்காளிகளான ஜி-7 நாடுகளிடையியே சீனாவின் அபிமானிகளின் செல்வாக்கு காணப்படுகிறது. குறிப்பாக, அண்மைய ஜி-7 மாநாட்டில் பி.ஆர்.ஐக்கு எதிராக பி3.டபிள்யு திட்டம் முன்மொழியப்பட்டது. எனினும். ஜி-7 நாடுகளில் ஒன்றாகிய இத்தாலி இத்தாலி 2019-லேயே 'பி.ஆர்.ஐ'யில் இணைந்துவிட்டது. ஜேர்மனியும் 'பி.ஆர்.ஐ'க்கு சாதகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, அமெரிக்காவின் பி3.டபிள்யு திட்டத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது. 

மூன்றாவது, நேட்டோவில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய கூட்டும் சீனாவுடனான அமெரிக்காவின் பனிப்போரில் இணைந்து செல்ல தயாரில்லை. ஆக்கஸ் ஒப்பந்தத்திற்கு முன்னரே சீனாவுடனான அமெரிக்காவின் பனிப்போரில் ஐரோப்பிய ஒன்றிய ஈடுபாட்டை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி விரும்பி இருக்கவில்லை. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிப்ரவரியில்(2021), சீனாவுக்கு எதிராக அணிசேர்வது 'எதிர் விளைவை ஏற்படுத்தும், ஆசியாவில் சீனாவின் கட்டுப்பாட்டாளராக அமெரிக்காவுடன் இணைந்திருக்க மாட்டேன்' என்று எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் ஜூலை(2021) மாதத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை அமெரிக்க ஜனாதிபதி பிடன் சந்தித்தபோது, சுதந்திரமான மற்றும் திறந்த சமூகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்த சீனா செயல்படுவதாக கூறினார்.  ஆனால் சீனாவைப் பற்றிய மேர்க்கலின் முதல் குறிப்பு, 'ஒத்துழைப்பு மற்றும் போட்டியின்' அவசியத்தை வலியுறுத்துவதாகும். அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியன பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகளில் ஒரு மூலோபாய சமநிலையை நாடுகின்றன. இது ஐரோப்பிய ஒன்றியம் உலகின் இரண்டு பெரிய வல்லரசுகளினை சமதூரத்தில் பேண விரும்புகிறது.

நான்கு, இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை அமெரிக்கா நிலையான கட்டமைப்பாக நிறுவ முயலுகின்றது. எனினும் அது பூரணத்துவம் பெறமுடியவில்லை. குவாட் இந்தோ-பசுபிக் மூலோபாயத்திற்கான முன்முயற்சியாக அமைகின்ற போதும், குவாட்-இன் நிலைத்திருப்பும் வெளித்தோற்றத்தில் கேள்விக்குறியாகவே தோன்றுகின்றது. 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குவாட் வலையமைப்பு முயற்சியில் 2021ஆம் ஆண்டே தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்டு மாநாட்டை நடாத்தி உள்ளார்கள். மேலும், குவாட் நாடுகளின் ஒரு பிரிவிடையே மேற்கொள்ளப்பட்ட ஆக்காஸ் உடன்பாடும் குவாட் நீடிப்புக்கான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

எனவே, பனிப்போர்க்காலத்தில் ரஷ்சியாவையும், பனிப்போருக்கு பின்னான காலத்தில் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தையும் கூட்டணி வலையமைப்புக்களை நிறுவி வெற்றி கொண்ட அமெரிக்காவிற்கு சீன பெரும் சவாலான நடாகவே காணப்படுகிறது. சீனாவிற்கு எதிரான கூட்டணி உருவாக்கத்தில் ஏற்படும் குழப்பங்கள் அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. அமெரிக்காவின் தாராண்மை பொருளாதாரத்துடன் அமெரிக்க புலமையாளர்களால் முன்மொழியப்பட்ட மென்அதிகார அரசியலையும் இணைத்து அமெரிக்காவினை ஒடுக்கும் வியூகத்தை சீனா உறுதிப்படுத்தியுள்ளது என்பதையே சர்வதேச அரசியல் களநிலவரங்களும் உறுதி செய்கின்றன. அனால் இவை எல்வாவற்றையும் உலக வரலாற்றின் இயங்கியல் போக்கு சுமூகப்படுத்திவிடும் என மேற்கு நாட்டின் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அதாவது அமெரிக்கா நெருக்கடிகளை வெற்றி கொள்ளும் என்பது தொடர்பிலான  ஆய்வுகளும் சர்வதேச அரசியல் பரப்ப்பில் இல்லாமலில்லை.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-