வடகொரியாவின் தொடர் ஏவுகணை பரிசோதனைகள் உலகளாவிய அரசியலின் மூலோபாய நகர்வா? -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச அரசியலில் ஏவுகணை பரிசோதனைகள்  கனதியான அரசியலாய் நிலைபெற்று வந்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸிற்கு பின்னர் உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பனிப்போர் தோற்றம் ஏவுகணை அரசியலையும் முதன்மைப்படுத்திவருகிறது. ஆக்கஸ் ஒப்பந்தம், ரஷ்சியாவின் ஹைப்பர்சொனிக் ஏவுகனை பரிசோதனை, தைவான் நீரிணை பதட்டம் எனும் ஒழுங்கினிலே வடகொரியாவும் தொடர்ச்சியாய் நவீனரக ஏவுகணை பரிசோதனைகள் மூலம் மாறிவரும் உலக ஒழுங்கில் தனக்கான நிலையை உறுதிப்படுத்துவதில் மும்மரமாக உள்ளது. இக்கட்டுரை வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளின் உலகளாவிய அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர்(2021) மாதத்தின் ஆரம்பத்திலிருந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது. செப்டெம்பர் முன்னரை பகுதியில் வடகொரியா மேற்கொண்ட க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை தொடர்பில் கடந்த இதழ்களில் இப்பகுதியில் ஆழமாக உரையாடப்பட்டது. தொடர்ச்சியாகவும் வடகொரியா பல நவீனரக ஏவுகணை பரிசோதனைகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஒக்டோபர்-19அன்று வடகொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இம்முறை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த சோதனை இரண்டு ஆண்டுகளில் அதன் முதல் நீர்மூழ்கிக் கப்பலில் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையாகத் தெரிகிறது. இச்சோதனையுடன் வடகொரியாவின் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆண்டின் எட்டாவது ஏவுகணை பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இது செப்டம்பர் முதல் ஐந்தாவது ஆகும்.

இந்த ஆண்டு(2021) ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி பிடன் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வடகொரியா இராணுவ அணிவகுப்பில் புதிய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணையை வெளியிட்டது. எனினும் இந்த ஆயுதத்தின் உண்மையான திறன்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் அது அன்றைய காலப்பகுதியில் சோதிக்கப்பட்டிருக்கவில்லை. இதனை உலகின் மிகசக்தி வாய்ந்த ஆயுதமாக வடகொரியா தெரிவித்திருந்தது. அண்மையில் ஆக்கஸ் ஒப்பந்தம் மற்றும் ரஷ்சியாவின் ஹைப்பர்சொனிக் ஏவுகணை பரிசோதனைகளில் நீர்மூழ்கிக்கப்பலில் ஏவுகணை பரிசோதனைகள் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில் வடகொரியா தனது புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என.;ஏ-இனூடாக ஒக்டோபர்-20அன்று தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கிக்கப்பலில் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை (எஸ்.எல்.பி.எம்) 2016இல் வடகொரியாவின் முதல் எஸ்.எல்.பி.எம் சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட அதே கப்பலான '8.24 யோங்குங்' (8.24 லுழபெரபெ) துணைப்பகுதியில் இருந்து ஏவப்பட்டதாக கே.சி.என்.ஏ கூறியது. மேலும், 'அந்த ஏவுகணையில் பல மேம்பட்ட கட்டுப்பாட்டு வழிகாட்டுதல் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை உயர் மட்டத்தில் கொண்டு செல்வதற்கும், நமது கடற்படையின் நீருக்கடியில் செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கும் பெரிதும் பங்களிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளது.

வடகொரிய இயல்பினில் அதிகம் போருக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேசமாக காணப்படுகின்ற போதிலும் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனையின் அரசியலை சாதரணமாக கடந்துவிட முடியாது. கிம் ஜோங் உன்னின் தலைமையிலான வடகொரிய அரசியல் சர்வதேச அரசியல் ஒழுங்கில் தனித்துவமான நிலையை பெற்றுள்ளது. எனவே இவ்ஏவுகணை பரிசோதனையை உரிய முக்கியத்துவம் கொடுத்து ஆராய வேண்டிய தேவை காணப்படுகிறது.

ஒன்று, கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு சார்ந்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலை தனக்கு சாதகமானதொரு களமாக மாற்றும் முயற்சியல் வடகொரியா இறங்கியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வெளியேற்றம் கொரிய தீபகற்கத்தின் தென்கொரிய பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்கா திடீர் வெளியேற்றத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. வடகொரியாவின் தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகத்தில் தேசிய உளவுத்துறை அதிகாரியான சிட்னி சீலர் சமீபத்தில் வடக்கிற்கு எதிராக மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் நடத்திய நிகழ்வில், 'அமெரிக்கா மட்டுமே தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். தென்கொரியா உட்பட வேறு எந்த சக்தியாலும் கொரிய தீபகற்பத்தை போரிலிருந்து பாதுகாக்க முடியாது.' எனத்தெரிவித்துள்ளார். இந்த மனநிலைக்கு தென் கொரியாவில் நிரந்தர அமெரிக்க இராணுவ இருப்பு தேவை மற்றும் தன்னை தற்காத்துக் கொள்ளும் தெற்கின் திறனையும் கேள்விக்குட்படுத்துகின்றார். இக்கருத்து நிலை கொரிய தீபகற்பத்திலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறக்கூடிய எதிர்பார்க்கையாகவே மதிப்பிடப்படுகிறது. இந்த பயம் சார்ந்த கதை அரசு சாரா பிரச்சாரங்களிலும் பிரதிபலிக்கிறது. செப்டெம்பர் மாதம், புதிய குழு ஒன்றான ழுநெ முழசநய நேவறழசம மற்றும் முழசநயn ஊழளெநசஎயவiஎந Pழடவைiஉயட யுஉவழைn ஊழகெநசநnஉந (முஊPயுஊ) உடன் இணைந்து அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜர்னலில் (றுயடட ளுவசநநவ துழரசயெட) ஒரு முழு பக்க விளம்பரத்தை பிரசுரித்தது. அதில், 'கொரியப் போருக்கு முன்மொழியப்பட்டபடி முன்மொழியப்பட்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் மசோதாவில், சாத்தியமான அமெரிக்க-தென்கொரியா கூட்டணியை குறைத்து, போரின் சாத்தியத்தை அதிகரிக்கிறது.' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முஊPயுஊ-இன் ஒரு அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை 'பொறுப்பற்றது' என்று விவரிக்கிறது. இவ்பயத்தை வடகொரியா தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மூலோபய நகர்வாக வடகொரியாவின் தொடர் ஏவுகணை பரிசோதனைகள் அவதானிக்கப்படுகிறது.

இரண்டு, அமெரிக்க-தென்கொரியாவின் சமாதான முயற்சியில் வடகொரியா தனது உயரிய விருப்பை அடைவதற்கான முன் நிபந்தனைகளை உறுதிப்படுத்துவதற்கான உத்தியாக தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகள் நிபுணர்களால் அவதானிக்கப்படுகிறது. வடகொரியா பரப்பில் ஏவுகணை பரிசோதனை செய்தியிடல்கள் பிரதான நிலை பெறும் மறுதளத்தில் தென்கொரியா-அமெரிக்க கூட்டில் வடகொரியா உடனான சமாதான களத்தினை திறப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 1950-1953 கொரியப் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஜனாதிபதி மூன் ஜே-இன் முன்மொழிவைப் பற்றி விவாதிக்க தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுஹ் ஹூன் கடந்த வாரம் வாசிங்டனில் இருந்தார். இந்த வாரம், வடகொரியா கொள்கைக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சங் கிம் சியோலில் தனது தென்கொரிய மற்றும் ஜப்பானிய சகாக்களுடனான முத்தரப்பு சந்திப்பிற்கு முன், அவரது தென்கொரிய சகாவான நோ க்யு-டுக்குடன் இதர பிரச்சினைகளை ஆராய இருந்தார். தீபகற்பத்தில் உள்ள உறுதியற்ற தன்மையின் அரசியல் பரிமாணத்தை நிவர்த்தி செய்ய சியோல் வாசிங்டனுடன் தொடர்ச்சியாக சமதான முன்னெடுப்புக்களை நகர்த்தி வரும் சூழலிலேயே வடகொரியா தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனை மூலம் தன் பலத்தை வெளிப்படுத்தி சமாதான உரையாடலில் வடகொரியாவின் உயரிய இலக்கு அடையப்பட வேண்டுமென்ற சமிக்ஞையை வழங்குவதாக அவதானிக்கப்படுகிறது. தென்கொரியாவுடனான உறவை மேம்படுத்துவதில் வடகொரியாவின் உள்நோக்கம் இறுதியில் அதை ஆக்கிரமிப்பதாக வாதிடுவது கொரியாக்களுக்கு இடையே அமைதியான சகவாழ்வுக்கான சாத்தியத்தை புறக்கணிப்பதாக நிபுணர்களிடையே முரணான வாதங்கள் காணப்பட்டாலும் வடகொரியாவின் செயற்பாடுகள் ஆக்கிரமிப்பே சமாதான உரையாடலிலும் முதன்மைபெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைகிறது.

மூன்று, வடகொரியாவின் நடவடிக்கை பிடன் நிர்வாகத்திற்கான எச்சரிக்கையாகவும் அவதானிக்கப்படுகிறது. புதிய ஏவுகணைகளை வெளியிட்டது வடகொரியாவின் வளர்ந்து வரும் இராணுவ வலிமையினை பிடன் நிர்வாகத்திற்கு ஒரு செய்தியாக வழங்குவதாக தோன்றுகின்றது. பிடன் ஜனாதிபதியாக பதவியேற்ற காலப்பகுதியிலும் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிடன் பதிவியேற்று பத்து மாத காலப்பகுதியில் எட்டு வேறுபட்ட ஏவுகணை பரிசோதனை என்பது பிடன் நிர்வாகத்துக்கு தனது பலத்தை வெளிப்படுத்தும் செயற்பாடாகவே அவதானிக்கப்படுகிறது. குறிப்பாக அண்மைய காலப்பகுதியில் வடகொரிய செய்திப்படங்களில் முதன்மைப்படுத்தப்படும் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரி கிம் யோ ஜாங் இவ்வாறான கடினமான தெரிவுகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. சியோலில் உள்ள சில நிபுணர்களும் ஜனவரி மாதம் எட்டாவது கட்சி மாநாட்டின் போது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியதன் அடிப்படையில் வடக்கில் ஏவுகணைகளை சோதனை செய்வதாகக் கூறியுள்ளனர். அதன் வெளிப்பாடகவே இது காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

நான்கு, புதிய உலக ஓழுங்கில் சீனாவிற்கு எதிராக கட்டமைக்கப்படும் அமெரிக்கா தலைமையிலான குவாட் அணியினருக்கு பதிலாக சீனாவின் இராணுவ பாதுகாப்பு அணியின் அங்கமாக வடகொரியா அடையாளப்படுத்தப்படுவதாகவும் அவதானிக்கப்படுகிறது. சீனா அதிகம் தனது மென்வலுவினையே பொதுவெளியில் அடையாளப்படுத்தி வருகிறது. எனினும் அமெரிக்கா தலைமையிலான அணி இராணுவ பாதுகாப்பு உத்திகளை பலப்படுத்துவதனூடாக சீனாவிற்கெதிராக வன்வலு அணியை கட்டமைத்து வருகிறது. ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் அவ்வாறானதொரு நடவடிக்கையேயாகும். அதற்கு பதிலீடாக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை அடுத்த திருப்புமுனையாக மாற்றுவதன் மூலம் அணு ஆயுதமயமாக்கல் செயல்முறையில் சீனா தனது விரிவாக்கத்தை விரிவுபடுத்த விரும்புகிறதாகவும் அதற்கு முன்நகர்வாக வடகொரியா ஊடாக தனது வன்வலுவை அடையாளப்படுத்தும் உத்தியை மேற்கொள்வதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடகொரியா முறையான இராணுவ அபிலாசைகளைக் கொண்ட நாடாகும். அதன் இராணுவ உத்திகளை எளிதில் சாதாரணமாக கடந்து செல்வது சர்வதேச அரசியல் மாற்றங்களை புரிந்து கொள்வதில் கடினத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாகும். அண்மைய தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகள் வடகொரியாவின் தேசிய நலன் சார்ந்த மூலோபாய நடவடிக்கையாக அமைவதுடன் சர்வதேசரீதியான அரசியலிலும் அமெரிக்க-சீன அரசியல் போட்டியின் களத்தை பிரதிபலிக்கும் உத்தியாகவுமே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-