இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் அரசியல் ரீதியாக அதிக விவாதங்களை உருவாக்கியுள்ளது. அநுரகுமார திசநாயக்காவின் வெற்றியும், இடதுசாரி மரபுடைய ஜே.வி.பி.யின் எழுச்சியும் அதிக கவனத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை ஆட்சி மாற்றம் தொடர்பான 'அமைப்பு மாற்றம்' எனும் விபரிப்புகள் சாத்தியப்படுத்தக்கூடியதா எனும் தேடல்களும் பொதுஆய்வு பரப்பில் உருவாகியுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் ஆட்சி மாற்றங்கள் சில சிறப்பு பெயரிடல்களால் விபரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1994ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா அமைதிப் புறாவாக சித்தரிக்கப்பட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக பெயரிடப்பட்டது. எனினும் ஆட்சிக்காலப்பகுதிகள் கருப்பன் வெள்ளையாக இருந்த நிலைமையினையே பிரதிபலித்திருந்தது. பெயரிடலுக்கும் ஆட்சி இயல்புகளுக்கும் பொருத்தப்பாடு இருந்ததில்லை. தற்போது 2024இல் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ஆகியுள்ளமையும் அமைப்பு மாற்றத்திற்கான (System Chang...