கொரோனா தொற்றை தவிர்க்க புத்தரின் போதனை வழியில் செயற்படுமா இலங்கை? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை ஏதோ ஓர் சுழலில் கொரோனா வைரஸ் அபாயத்துக்குள் சென்று கொண்டுள்ளது என்பதையே அண்மைய தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. சடுதியாக 3 நாட்களுல் 200இற்கும் மேற்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுகாதார சபை செஞ்சிலுவைச்சங்கத்திடம் 1000 பிரேத பைகளை கேட்டுள்ளமையும் இலங்கை மக்களை மேலும் பீதிக்குள்ளும் தள்ளியுள்ளது. இன்றைய சூழலில் தீர்க்கமான வகையில் இலங்கையில் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே பரந்த மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டி உள்ளது. இலங்கையின் இயல்பில் விரும்பியோ விரும்பாமலோ மதரீதியான செல்வாக்கு அதீதமாக காணப்படுவதனால் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவதில் மதரீதியான பங்களிப்பினையும் ஆராய வேண்டி உள்ளது. இலங்கை அரசியலமைப்பு ரீதியாகவே புத்த பகவானின் பின்தோன்றலான பௌத்தத்தை இறுக்க கட்டி கொண்டு விட்டது. புத்த பகவானின் சித்தாந்தத்தையும் இறுக பின்பற்றினேயே இலங்கையின் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக காணப்படும். ஆயினும் பௌத்தத்தை இறுக அணைத்துள்ள இலங்கை அரசு பௌத்த சித்தாந்தத்தை தள்ளியே வைத்துள்ளமை துர்ப்பாக்கியமே ஆகும். கொரோனா பரவுகையின் பின்னர் தமி...